பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

மிக்க அவர் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் அன்பும் பரிவும் பாசமும் கொண்டவர். நடுநிலை உணர்வோடு இந் நூலை முழுமையாகப் படித்து, தன் திறனாய்வுக் கருத்துக்களால் நூலுக்கு அணி செய்துள்ளார். என் முயற்சிக்கு நல்லாசி வழங்கிய ‘அருட் தந்தை’ அவர்கட்கு என் இதய நன்றி. இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளில் பெரும்பாலானவை ‘தினமணி’ இதழில் வெளி வந்தவைகளாகும். அன்றைய ‘தினமணி’ ஆசிரியரும் திறம்பட்ட அறிவியல் எழுத்தாளருமான திரு மாலன் அவர்கள் இந் நூலுக்குக்குச் சிறப்புரை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள். அனைத்துச் சமயங்களின் தத்துவக் கருத்துகள் சங்கமிக்கும் நடுநிலைமை நாளிதழாக ‘தினமணி’ தொடர்ந்து தொண்டாற்றும் என்ற நம்பிக்கை இவர் மூலம் மீண்டும் உறுதி செய்யப்படுவது மனதுக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது. அவரது அன்புக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இந்நூலுக்கு மவ்லானா எம்.அப்துல் வஹ்ஹாப், எம். ஏ ; பி. டிஹெச் அவர்கள் அவர்கட்கே உரிய முறையில் ‘ஆய்வுரை’ ஒன்றை வழங்கியுள்ளார்கள். எமது நூலுக்கு மேலும் வலுவூட்டும் முறையில் அவர்தம் கருத்துகள் அமைந்துள்ளன. அவருக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இதில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் சிலவற்றை அவ்வப்போது வெளியிட்ட மாலை முரசு, ஆசிரியருக்கும் அனைத்திந்திய வானொலி நிலையத்தாருக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

எனது முந்தைய நூல்களை ஏற்று ஆதரித்தது போன்ற இம்மறு பதிப்பையும் தமிழுலகம் ஆதரிக்கும் என்ற நம்பிக்கை என்றும் எனக்குண்டு.

அன்பன்
மணவை முஸ்தபா
நூலாசிரியன்