பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அருளப்பட்டது. பெருமானாருக்கு முந்திய இறை தூதர் பலருக்கும் கூட இதே ரமளான் மாதத்தில் தான் இறை வேதங்கள் இறக்கியருளப்பட்டன என்பது இறைமறை தரும் வரலாற்றுச் செய்தியாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஹஜ் தவிர்த்துள்ள ஈமான், தொழுகை நோன்பு, ஜகாத் ஆகிய நான்கு கடமைகளும் இப்புனித ரமளான் மாதத்தில்தான் ஒருசேர நிறைவேற்றப்படுகின்றன.

ரமளான் மாதம் முழுமையும் நோன்பு (விரதம்) நோற்கப்படுகின்றது. நோன்பாகிய விரதம் இந்து சமயம் உட்பட உலகத்துப் பெரும் சமயங்கள் அனைத்தும் வற்புறுத்தும் வாழ்வியல் அறநெறிக் கடமையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவதான நோன்புக் கடமை பற்றி திருமறை.

“நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முந்தியவர்மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது” (2.183) எனக் கூறுகிறது.

ஆனால், இஸ்லாமிய நோன்புக்கும் பிற சமய விரதங்களுக்கும் அதைக் கடைபிடிக்கும் வழிமுறைகளில் பெரும் வேறுவாடு உண்டு. சில மதங்கள் ஒரு சில நாட்கள் தொடர்ந்து விரதமிருக்கப் பணிக்கின்றன. இன்னும் சில ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம்வரை விரதம் இருக்கக் கூறுகின்றன. வேறு சில சமயங்கள் குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட உணவு வகைகளை விலக்கி உண்ணும்படி கட்டளையிடுகின்றன. விரும்பும்போது விரதம் இருக்கப் பணிக்கும் சமயங்களும் உள்ளன.

ஆனால், இஸ்லாமிய மார்க்கம் வகுத்தளித்துள்ள ரமளான் மாத நோன்பில் மாற்ற திருத்தங்களுக்கும் நெளிவு சுளிவுகளுக்கும் அறவே இடமில்லை. ரமளான் மாத பிறை