பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

வரவும் செலவும்
நேரிய வழியில்

ஜகாத் கடமையை செவ்வனே நிறைவேற்றுவதன் மூலம் தனிப்பட்டவர்களிடம் தேங்கும் பொருட் குவிப்பு ஓரளவு தடுக்கப்படுகிறது. இதன் மூலம் பொருளாதார மேடு பள்ளங்கள் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு சமனப்படுத்தப்படுகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையும் ‘எல்லாவற்றிலும் எல்லோர்க்கும் உரிமை’ என்ற நியதியும் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் சமுதாய நலன் முழுமையாகப் பாதுகாக்க வழி கோலப்படுகிறது. மேலும், சம்பாதிக்கத் தெரிந்த முஸ்லிம் அதைப் பயனுள்ள வழியில் எவ்வாறு செலவழிப்பது என்பதற்கான பயிற்சி தரும் வழிமுறையாகவும் ஜகாத் கடமை அமைந்துள்ளது.

மற்ற மாதங்களைவிட ரமளான் மாதத்தில் மிக அதிகமான வணக்க முறைகளில் முஸ்லிம்கள் முழுமையாக ஈடுபடுகின்றனர். தொழும்போது நெற்றி நிலத்தில் பதிய அடிபணிந்து இறைவனை வணங்கம் முஸ்லிம் எண்ணத் திலும் செயலிலும் இறையுணர்வே இழையோடிக் கொண்டிருக்கும் வகையில் இஸ்லாத்தின் வணக்க முறைகள் அமைந்துள்ளன.

ஐம்பெரும் கடமைகளும்
இறைவணக்க முறைகளே

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளும் இறைவணக்க முறைகளாகவே அமைந்துள்ளன. கலிமா எனும் இறை நம்பிக்கை உள்ளத்தால் இறைவனை வணங்குவதாகும். தொழுகை உடலால் வணங்கும் வணக்க முறையாகும். நோன்பு அல்லாஹ்வை உடலாலும் உள்ளத்தாலும் வணங்குவதாகும். ஜகாத் எனும் தான தருமம் பொருளால்