பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் இறைத் தத்துவ ‘ஹஜ்’ பெருநாள்


‘ஒரே இறைவன்’

ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஈராக் நாட்டில் தோன்றியவர் ஏப்ரஹாம் என்றழைக்கப்படும் நபி இபுறாஹீம் அவர்கள். இவரை உலக மக்களில் மூன்றில் இரு பங்கினரான யூத, கிருத்துவ, இஸ்லாமிய சமயப் பெருமக்கள் ஓர் இறை தத்துவத்தை உலகுக்குப் போதித்த மாபெரும் தீர்க்கதரிசியாகக் கருதிப் போற்றுகின்றனர்.

இவர் தோன்றிய காலம் அறியாமையிருள் மண்டிக் கிடந்த காலம். இவர் அந் நாட்டின் புகழ்பெற்ற குருமார் குடும்பத்தில் பிறந்தவராயினும் இறைவனின் பெயரால் குருமார்கள் செய்துவந்த கொடுஞ் செயல்களும், தங்களையே கடவுளாக மக்கள் வணங்க வேண்டுமெனக் கட்டளையிட்ட மன்னர்களின் அதிகாரத்துவமும் இப்ராஹீம் நபி அவர்களின் உள்ளத்தை வேதனைப்படுத்தின. இறைவன் பெயரால் நடைபெற்றுவந்த கொடுஞ் செயல்களை வன்மையாகக் கண்டித்ததால் ஆட்சியாளர், குருமார்களின் வெறுப்புக்கும் பகைக்கும் ஆளானார். எதற்கும் அஞ்சாமல் ‘என்னுடைய வாழ்வும் மரணமும் யாருடைய கையில் உள்ளனவோ அவனே எனது இறைவன்’ எனப் போதித்தார். இதன் விளைவாகத்