பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

119

தந்தையால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்டார். மன்னனால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். ஆயினும், ஓரிறைத் தத்துவத்தை அசைக்க முடியாத நம்பிக்கையாளராக விளங்கிய இபுறாஹீம் (அலை) இறைவனால் படைக்கப்பட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியவை அல்ல. அனைத்தையும் படைத்த இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன் என்ற கருத்தைத் துணிவாக மக்களிடையே பரப்பி வந்தார். இதற்காக அடுக்கடுக்கான துன்பங்களை அடைந்தார். இறுதியில் நாட்டைவிட்டு வெளியேறித் தன் மனைவியோடு ஊர் ஊராக அலைந்து திரிந்து ஒரே இறைவன் என்ற தத்துவத்தைத் தொடர்ந்து போதித்தார்.

தியாகச் சிகரம்

இத் தூய இறை பணியில் தம் இளமைக்காலம் முழுவதையும் செலவிட்டு முதுமையின் எல்லைக்கோட்டை அடைந்தார். தனக்குப்பின் உண்மை இறையுணர்வை உலக மக்களுக்கு உணர்த்தும் தன் ஓரிறைத் தத்துவ இயக்கத்தைத் தொடர்ந்து நடத்த வாரிசு ஏதும் இல்லையே எனக் கவலைமிகக் கொண்டார். இறைவனிடம் முறையிட்டுக் கண்ணீர் வடித்தார்.

இறைவனின் கருணையினால் எண்பது வயதைக் கடந்த முதுமையில் பிள்ளைப் பேறு கிடைத்தது. தன் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி, வழி தவறிய மக்களை நேர்வழிப்படுத்த பிள்ளைப் பேறு கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார். மகனும் தந்தைக்கு உற்ற பிள்ளையாக இஸ்மாயீல் எனும் பெயரோடு வளர்ந்து பிள்ளைப் பிராயத்தை அடைந்தார். அம் மகிழ்ச்சிக்கு ஒரு நாள் பெரும் சோதனை ஏற்பட்டது. தன் மகனைத் தானே இறைவனுக்கு பலியிடுவதுபோல் இபுறாஹீம் நபி கனவு கண்டார். அக்