பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இஸ்லாமியப் புத்தாண்டு
‘முஹர்ரம்’


உலக முஸ்லிம்கள் முஹ்ர்ரத்தைப் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய ஆண்டு ‘ஹிஜ்ரி’ என அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு மாதங்களில் முதல் மாதம் முஹர்ரம். கடைசி மாதம் துல்ஹஜ்.

ரமலான், பக்ரீத் பெருநாள்களுக்கு அடுத்தபடியாகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது முஹர்ரம் திருநாளாகும்.

‘ஹிஜ்ரி’ ஆண்டு நபிகள் நாயகம் (சல்) வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாகும்.

நபிகள் நாயகம் (சல்) மக்காவிலிருந்து மதீனா நோக்கி ‘ஹிஜ்ரத்’ செய்த நாளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ‘ஹிஜ்ரத்’ என்ற சொல்லுக்கு இடம் மாறிச் செல்லுதல் என்பது பொருளாகும். மக்கா குறைஷிகளின் கொடுமைகளிலிருந்து தப்பி, இஸ்லாத்தைப் பரப்ப நபிகள் நாயகம் (சல்) மதீனா சென்ற நிகழ்ச்சியே ‘ஹிஜ்ரத்’ ஆகும்.

இஸ்லாமியப் புத்தாண்டு மாதமான முஹர்ரம் உழைப்பைப் போற்றும் மாதமுமாகும். உழைப்பை மிகவும்