பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

பெருமானார் (சல்) அவர்களுக்கு மனித குலம் கடமைப்பட்டுள்ளது. அது மட்டுமா? உலக வரலாற்றிலேயே முதலில் சமயச் சார்பற்ற பொது அரசைக் கண்ட பெருமையும் பெருமானார் (சல்) அவர்களுக்கே உரியது என்பதை இந்நூலாசிரியர் விளக்கி எழுதியுள்ள பகுதி பலரும் பலகாலும் படித்தற்குரியது.

பெருமானார் (சல்) அவர்கள், மனிதர்களுக்குள் குலம், கோத்திரம் முதலிய அடிப்படையில் வேற்றுமை நிலவுவதை விரும்பாதது மட்டுமல்ல, வெறுத்தார்கள். ‘மனிதகுலம்!’ ஒன்றே என்ற கொள்கையில் பெருமானார் (சல்) அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டை இந்த நூலாசிரியர் உயிர்ப்பும் உணர்வும் கலந்த நடையில் எழுதியிருப்பது பலநூறு தடவை படிக்க வேண்டிய பகுதி. “மனிதனுக்கு மனிதன் வேற்றுமை உணர்வு காட்டுவது அறவே கூடாது. உலகத்து மக்கள் அனைவரும் ஆதாமின் வழி வந்த சகோதரர்களேயாவர். ஒருவரை ஒருவர் இனம் காணவே குலங்களும் கோத்திரங்களும் உருவாயின. இதையே திருமறை, “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும்பொருட்டு உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். ஆதலால் ஒருவர் மற்றவரை விட மேலானவர் என்று பாராட்டிக் கொள்வதற்கில்லை” (குர்ஆன் 49 : 1.3) என்ற இறைவாக்கு வரலாறாக மாறினால் கெட்ட போரிடும் உலகத்தை மாற்றலாம். அமைதியும் சமாதானமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கலாம்.

புண்ணியம் எது? பக்தி எது? பரிசுத்தம் எது? என்பதனை நூலாசிரியர் திருமறை வாக்கினை வைத்து விளக்கும் பகுதி பயனுள்ள பகுதி. எல்லாரும் படிக்க வேண்டிய பகுதி. குறிப்பாக மனித நேயத்தை மறந்து