பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

விட்டு, கடவுளைச் சுற்றுகிறவர்கள் படிக்க வேண்டிய பகுதி. “உங்கள் முகங்களைக் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல புண்ணியம். ஆனால் அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும், வானவர்கள் மீதும், நம்பிக்கை கொண்டு (அலலாஹ்வின் மீதுள்ள) நேசத்தின் காரணமாகத் தன் (நெஞ்சுவக்கும்) பொருள்களைச் சுற்றத்தாருக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும் யாசிப்போருக்கும் ஈதலும் தொழுகையை நிலை நாட்டுதலும் ஜகாத்கொடுத்து வருதலுமே புண்ணியமாகும்” என்று கூறும் பகுதிகள் என்றும் நினைவிற்கொள்ள வேண்டியவை; நின்றொழுக வேண்டியவை.

பெருமனார் (சல்) அவர்கள் உழைப்பின் உயர்வை விளக்கிய பகுதிகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

இந்த நூல் ஒரு நல்ல நூல் !

பலரும் படித்துப் பயனடைய வேண்டும் !

நூலாசிரியர் மணவை முஸ்தபா அவர்கள்

அளவற்ற அருளாளன் கருணையால்

வாழ்வாங்க வாழ்க ! வளர்க !

இன்ப அன்பு
குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி
1 - 7 - 1993.