பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
‘ஹஜ் பெருநாள்’


இறையில்லங்களின் தாய்

ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள் ‘ஹஜ்’ பெருநாளாகவும் அமைந்துள்ளது. ‘ஹஜ்’ என்ற சொல்லுக்குச் ‘சந்திக்க நாடுதல்’ என்பது பொருளாகும். ஹஜ்ஜின் போது உலகெங்குமுள்ள மக்கள் “கஃபா இறை இல்லத்தைச் சந்திக்க நாடி வருவதால் ‘ஹஜ்’ என அழைக்கப்பட்டது.

ஐம்பெரும் இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது இறுதிக் கடமையாக அமைந்திருப்பது ஹஜ் கடமை. எல்லோருக்குமுரிய கடமையாயினும் உடல் நலமும் பொருள் வசதியுமுள்ளோருக்குக் கட்டாய கடமையாகும்.

துல்ஹஜ் மாதத்தில் உலகெங்குமுள்ள முஸ்லிம் மக்கள் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குவதற்கென மக்காவில் அமைந்துள்ள ‘கஃபா’ இறையில்லம் சென்று இறைவணக்கம் புரிவதே ஹஜ் ஆகும்.

உலகிலுள்ள அத்தனை பள்ளிவாசல்களுக்கும் தாய் போன்றது கஃபா இறையில்லம். ஆனால், உலகிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தின் அமைப்புக்கும் தன்மைக்கும். முற்றிலும் மாறுபட்டதாக கஃபா விளங்குகிறது. உலகெங்குமுள்ள பள்ளிவாசல்களில் இறை வணக்கம்