பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

155

எண்ணிக்கை (ஓராண்டில்) பன்னிரண்டு தான். இவ்வாறே வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வால் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவைகளில் நான்கு மாதங்கள் சிறப்புமிக்கவை” (9:36)

திருமறை குறிப்பிடும் நான்கு புனித மாதங்களில் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.

முஹர்ரம் மாதம் அல்லாஹ்விடம் தனிச்சிறப்புப் பெற்ற மாதம் என்றும், அம்மாதத்தில் இறைவனை நோக்கிப் பிழை பொறுக்க ஒவ்வொருவரும் கேட்கும் “இறைவேட்டல்கள் (துஆ) அல்லாஹ்வால் ஏற்கப்பட்டு மன்னிப்பு வழங்கப்படுகிறது” என்றும் பெருமானார் (சல்) அவர்கள் கூறியுள்ளதிலிருந்து இந்நாளின் சிறப்புப் புலனாகும்.

“ஆண்டின் இறுதி மாதமாகிய துல்ஹஜ் திங்களின் இறுதி நாளிலும் ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் முதல் நாளன்றும் தொடர்ந்து நோன்பு நோற்போரின் ஐம்பதாண்டு காலப் பாவம் இறைவனால் பொறுக்கப்படுகிறது” என அண்ணலார் கூறியுள்ளதால் இவ்விரு நாட்களும் இறைவனின் கருணை பொழியும் நாட்களாகவே அமைந்துள்ளதெனலாம்.

நல்லுணர்வின் ஊற்றுக்கண்
முஹர்ரம்

நாயகத் திருமேனியின் பிறப்புக்கும் முன்பிருந்தே முஹர்ரம் மாதம் அராபியர்களால் புனிதமிகு மாதமாக, அமைதி போற்றும் அரிய மாதமாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. இம் முஹர்ரம் மாதத்தில் எக்காரணம் கொண்டும் வன்முறைச் செயல்களில் அரபிகள் ஈடுபடுவதில்லை. யாரிடத்தும் விரோதமோ, குரோதமோ காட்டுவதில்லை. வன்மம், பலாத்காரம் என்ற உணர்வுகட்கு மனதில்