பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

அறவே இடமளிப்பதில்லை. அன்பு, அருள், அமைதி, சாந்தம், மகிழ்ச்சி ஆகிய நல்லுணர்வுகள் பொங்கிப் பொழியும் ஊற்றாக நெஞ்சத்தை ஆக்கிக் கொண்டு மனிதப் புனிதர்களாக வாழ முற்படுவர். எனவே, தீய உணர்வுகள் நீங்கிய சதியினின்றும் அறவே, விலக்கப்பட்ட-அதாவது ஹராமாக்கப்பட்ட ‘அல்ஹராம்’ எனும் பொருளிலேயே ‘முஹர்ரம் என அழைக்கப்படுகிறது. துவக்க மாதமாகிய ‘முஹர்ரம்’ முதல் மாத உணர்வே ஆண்டு முழுவதும் வாழ்வில் அரசோச்ச வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் வேணவாவாகும்.

இந்தியா உட்பட உலகெங்கும் பலவித ஆண்டுக் கணக்குகள் நிலவி வந்த போதிலும் உலகெங்கும் பேணப்பட்டு வரும் ஆண்டுக்கணக்குகள், கிருஸ்துவ ஆண்டுக் கணக்கும் இஸ்லாத்தின் ஹிஜ்ரி ஆண்டுக் கணக்குமேயாகும். உலகப் பெரும் சமயங்களாக இவ்விரண்டும் அமைந்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணமாகும்.

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கிற்கும் கிருஸ்தவ ஆண்டுக் கணக்கிற்கும் சிறிதளவு வேறுபாடு உண்டு. கிருஸ்தவ ஆண்டுக்கணக்கு சூரிய சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி கணக்கு சந்திரப் பெயர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு அமைந்துள்ளது. சூரியக் கணக்குப்படி ஆண்டுக்கு 365 நாட்கள் சந்திரக் கணக்குபடி ஒராண்டுக்கு 354 நாட்கள். மட்டுமே. இரண்டிற்குமிடையே குறைந்தது 10 நாட்கள் வித்தியாசமுண்டு.

இறை கட்டளைகளை
நினைவூட்டும் முஹர்ரம்

எனினும், இஸ்லாமியப் புத்தாண்டான முஹர்ரம் வெறும் நாட்களை மட்டும் குறிப்பதாக அமையாமல்