பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

159

இதுவரை கூறப்பட்ட வரலாற்று நிகழ்ச்சிகள் பெருமானார் பிறப்பதற்கு முன்னதாக நடைபெற்றவை களாகும்.

கர்பலா துன்ப
நிகழ்வு

பெருமானார் பெருவாழ்வு முடிவுற்ற பின்னர் அவர் தன் பேரர் இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவரது குடும்பத்தினரும் தோழர்களும் கர்பலா எனுமிடத்தில் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான் படுகொலை செய்யப்பட்டனர். நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டவும் இஸ்லாமிய ஜனநாயகப் பண்பைக் கட்டிக் காக்கவும் இறைநெறியை நிலைநிறுத்தவுமே இன்னுயிர் ஈந்தனர். இமாம் ஹுஸைனின் இத்துன்ப முடிவு இஸ்லாமியரின் இதயத்தின் துன்பச் சுமையேற்றிய நிகழ்வு என்பதில் ஐயமில்லை. எனினும், இதன்மூலம் முஹர்ரம் மாதத்தின் சிறப்போ ஆஷூரா நாளின் புனிதத் தன்மையோ கூடவும் இல்லை. குறையவும் இல்லை. ஏனெனில் பெருமானார் மூலம் இஸ்லாமிய நெறியை நிறைவு செய்துவிட்டதாக இறைவன் தன் திருமறையில் தெளிவாகக் கூறியுள்ளான். எனவே, முஹர்ரம் மாதத்தின் மேன்மையை ஆஷூராவின் புனிதமிகு சிறப்பை கருத்திற்கொள்ளாது துக்கதினமாக மட்டும் கொண்டு செயல்படுவது இறைநெறிக் கோட்பாட்டிற்குப் பொருத்தமுடையதன்று.

முஹர்ரம் தரும்
எழுச்சிமிகு சிந்தனைகள்

புனிதமிகு முஹர்ரம் புத்தாண்டு அன்று எழுச்சிமிகு எண்ணங்களை நெஞ்சத்தில் தேக்கி எதிர்வரும் நாட்களை மகிழ்ச்சிப் பெருக்கோடு எதிர்கொள்ளவேண்டும். இறையாணைக்கொப்ப அமைதி மாதமெனும் முஹர்ரம் முதல்