பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

நாள் முதல் ஒவ்வொரு முஸ்லிமும் தன் அக வாழ்விலும் புற வாழ்விலும் அமைதிச் சூழ்நிலை உருவாவதற்காக முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அமைதி உணர்வுக்கு ஊறு ஏற்படுத்தும் வேற்றுமை உணர்வுகளை அறவே விலக்கி அன்பும் அமைதியும் நிலைபெற அரும்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் இனிய பண்பு வாழ்வில் அரசோச்ச வேண்டும். உலக மக்கள் அனைவரையும் ஆதாமின் வழிவந்த சகோதரர்களாகப் பாவிக்கும் இயல்புடைய இஸ்லாமியச் சகோதரர்கள் எக்காரணம் கொண்டும் வேற்றுமை உணர்வுகள் தங்களிடம் படியாவண்ணம் காத்துக் கொள்ள வேண்டும். ஒருங்கிணைவான உணர்வூட்டும் செயல்களை மட்டுமே மேற்கொள்ளவேண்டும். தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பேரறிவாளர்களாக வாழ இப்புத்தாண்டில் உறுதி கொள்ள வேண்டும். ஆஷூரா நோன்பு நோற்பதோடு ஏழை எளியோர்க்கு வாரி வழங்கியும் மார்க்கப் பெரியோர்களைத் தேடிச் சென்று கண்டும், தன் குடும்பத்தாரையும் தன்னைச் சார்ந்து நிற்போரையும் மகிழ்ச்சிப்படுத்தும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். இயன்ற வரை நஃபில் எனும் கூடுதல் தொழுகைகளை நிறைவேற்றி இறைவனின் இன்னருளைப் பெற்று உய்தி பெற முயல வேண்டும்.

நன்றி: தினமணி