பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 
பெருமானாரும்
அறிவியலும்


மனிதப் பிறப்பின்
மாபெரும் சிறப்பு

படைப்புகளிலே மிக உயர்ந்த படைப்பாக அமைந்திருப்பவன் மனிதன். இறைவனின் பிரதிநிதியாக, இறையம்சம் உடையவனாக இறைவனால் படைக்கப்பட்டிருப்பவன் மனிதன்.

மனிதனைத் தவிர்த்துள்ள மற்றையய உயிரினங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் இறைவன் வேண்டுமளவுக்கு வெளிப்படையாக கண் முன்னாலேயே கொடுத்துள்ளான். பிற உயிரினங்கள் அதிக முயற்சியின்றியே உண்ண உணவு, குடிக்க நீர், இருக்க இடம் ஆகிய அனைத்தும் அவை பெற்றுவிட முடியும். ஆனால், மனிதன்?

மனிதன் தனக்கு வேண்டிய எதனையும் தானாகவே முயன்று தேடிக் கண்டறிந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்குத் துணையாக மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள அரிய வெகுமதிகளே பகுத்தறிவும் சிந்தனையாற்றலும்.

பகுத்தறிவின் துணைகொண்டு எதனையும் ஆய்ந்தறிந்து உண்மையுணர்ந்து பின்பற்றப் பணிப்பது இஸ்லாம்.

11