பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163

பற்றிச் சிந்தனை செய்து நல்லறிவைப் பெற முயல்வது எழுபதாண்டுத் தொழுகையைவிட மேலானது.

இது மறைவழியே பெருமானார் உணர்த்தும் பேருண்மையாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஆய்வறிவோடு விளங்க வேண்டும் என்பதே இறைவனின் பெருவிருப்பமாகும்.

பெருமானார் அவர்கள் இறைவனிடம் மிகுதியாகக் கேட்டது “இறைவா! என் அறிவைப் பெருகச் செய்!” என்பதுதான்.

அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையான கல்விக்கு, பெருமானார் அளவுக்கு முக்கியத்துவம் அளித்தவர்கள்ள வேறு யாரும் இல்லை.

புதிய அறிவு புதிய செய்தி எங்கிருந்தாலும் எம் முயற்சியை மேற்கொண்டேனும் அதனைப் பெறத் தவறக் கூடாது எனப் பணித்தவர் அண்ணலார். ஆகவேதான், அக்காலத்தில் எண்ணிப் பார்க்க முடியாத தொலைதூரத்தில் கனவுலகம் போல் இருந்த சீனாவுக்குச் சென்றேனும் சீர் கல்வி பெற்றுத் திரும்பப் பணித்தார் பெருமானார் அவர்கள்.

“கல்வியைத் தேடுங்கள்; ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்தவனாவான்; கல்வியைப் பற்றிப் பேசியவன் இறைவனைத் துதி செய்தவனாவான்; அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்; தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரப்புவன் இறைவனுக்கு வணக்கம் செய்தவனாவான்” என்பது நபி மொழியாகும்.

ஆன்ம வளர்ச்சிக்குப் பள்ளிவாசல்
அறிவு வளர்ச்சிக்கு மதரஸா

இறை வணக்கத்திற்கென பள்ளிவாசலை உருவாக்கிய