பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

அரபு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்த பெருமானார் எத்தகைய ஆடம்பர வாழ்வையும் அனுபவித்திருக்க முடியும். ஆனால், எளிய வாழ்வே இன்பம் எனக் கொண்ட பெருமானாரின் இறுதிக் காலத்தில் அவரிடம் எஞ்சியிருந்தவை பழைய கட்டில், பழுதடைந்த ஈச்சம் பாய், பழைய கம்பளிப்போர்வை, சில சில்லரைப் பாத்திரங்கள் மட்டுமே.

இவ்வாறு எளிமையான, சிக்கனமான வாழ்க்கையைத் தான் மேற்கொண்டிருந்ததோடு அவற்றை மற்றவர்களையும் வாழத்துண்டி வழிகாட்டியவர் அண்ணல் நபி (சல்) அவர்கள்.

அண்ணலார் அடிச்சுவட்டில்
ஒளரங்கசீப் ஆலம்கீர்

இதே அடிப்படையில் தன் சிக்கனம் மிகுந்த எளிய வாழ்வைப் பெருமானார் பெருவழியில் வாழ்ந்து காட்டி மறைந்தவர் பாரத நாட்டின் பெரும் பகுதியை ஆண்டு வந்த ஒளரங்கசீப் ஆலம்கீர் என்பதை வரலாறு நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது. தான் நாட்டின் சக்கரவர்த்தியாக இருந்த போதிலும் அரசுப் பணத்தை அறவே தொடாது. தானே உழைத்து, தொப்பி தைத்தும் திருக்குர்ஆனுக்குப் படியெடுத்தும் அதனால் வரும் வருவாயைக் கொண்டு மட்டுமே தன் சொந்த வாழ்க்கைச் செலவுக்குப் பயன்படுத்தினார் ஒளரங்கசீப் சக்கரவர்த்தி அவர்கள்.

உழைப்பைப் போற்றிய
உத்தமத் திருநபி

எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த பெருமானார் உழைப்பின் உன்னதத்தைத் தம் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் உணர்த்தத் தவறவில்லை.

இறைவணக்கத்துக்கு அடுத்தபடியாகப் பெருமானா