பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 



ஈத்துவக்கும் இன்பத்
திருநாள்


வணங்குங்கள்
வழங்குகள்

ரமளான் பெருநாள். உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கினரான முஸ்லிம் பெருமக்கள் உலகளாவிய முறையில் மகிழ்வோடும் பூரிப்போடும் கொண்டாடி மகிழும் பெருநாள்.

ரமளான் மாதம் முழுமையும் மிக அதிகமான இறை வணக்கங்களில் ஈடுபட்டும் பகல் முழுமையும் ஒரு சொட்டு நீலம் பருகாமல் நோன்பு நோற்றல். இல்லாதோருக்கு ஏழையின் பங்கான ஜகாத் எனும் தானத்தை வாரி வழங்கியும், இறையருளைப் பெற்ற பெருமிதத்தோடும் பெருநாளாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இம்மாதம் இறைமறையாகிய திருக்குர்ஆன் பிறந்த புனித மாதமாகவும் போற்றப்படுகிறது. இம்மாதத்தில் வழக்கமான ஐவேளைத் தொழுகையோடு, ஒவ்வொரு நாள் இரவிலும் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகையும் முஸ்லிம்களால் நடத்தப்படுகிறது. இறைமறை பிறந்த இரவாக கருதப்படும் ‘லைலத்துல் கத்ர்’ இரவு முழுமையும்