பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

இறை வணக்கமும் இறை தியானமும் செய்யப்படுகிறது. இம்மாதம் முழுமையும் அதிக அளவில் இறை வணக்கங்கள் நிறைவேற்றப்படுவதால் ஒவ்வொரு முஸ்லிம் உள்ளமும் இறையுணர்வால் பொங்கிப் பொழிகிறது. மறை வகுத்த இறைநெறி இம்மியும் பிசகாது வாழ்ந்து இறையருளைப் பெற ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளமும் அவாவுகிறது. உறுதி கொள்கிறது. இதற்கேற்ப உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்தும் பயிற்சிக்களமாக ரமளான் மாதம் அமைகிறது.

‘ரமளான்’ என்ற சொல்லுக்கு ‘சுட்டெரித்தல்’, ‘பொசுக்குதல்’, ‘கரித்தல்’ எனப் பல பொருள்கள் உண்டு.

ஒவ்வொரு முஸ்லிமும் இம்மாதத்தில் மேற்கொள்ளும் சிறப்புத் தொழுகைகள், நோன்பு, ஜகாத் எனும் ஏழைவரி வழங்கல் ஆகிய செயற்பாடுகளால் தங்கள் மேல் படியும் தீய உணர்வுகளை, தீமைகளைச் சுட்டெரித்து மனிதப் புனிதனாகிறார்கள.

இறைமறையாகிய திருக்குர்ஆன் இறை வணக்கமாகிய தொழுகையைப் பற்றிக் கூறும்போதெல்லாம், கூடவே ஜகாத்தையும் குறிப்பிடுகிறது. இதிலிருந்து தொழுகைக்கு அடுத்த முக்கியத்துவத்தை ஜகாத் எனும் ஏழைவரி பெறு வது இனிது புலனாகிறது. ‘வணங்குங்கள்’ ‘வழங்குகள்’ என்பது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகும்.

வசதி படைத்தோர் வழங்கும்
வருமான வரி ‘ஜகாத்’

ஏழை வரியாக, ஏழைக்குரிய பங்காகக் கருதப்படும் ஜகாத் ஒருவகையில் வசதிப் படைத்தோர் செலுத்தும் வருமான வரி போன்றதாகும். எனினும் ஜகாத் என்பது நாம் அரசுக்குச் செலுத்தும் வரி வகைகளில் ஒன்றைப் போன்ற தன்று. இறைவன் அளித்த பொருளை, இறைக் கட்டளைப்