பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

படி, இறைவழியில் செலவு செய்யும் புனிதச் செயலாகும். இறைவன் பெயரால் வழங்கும் இச்செலவின் அளவுக்கேற்ப பன்மடங்குப் பயனை இறைவன் ஜகாத் வழங்கிய வருக்கு வழங்குகிறான்.

உலகில் உள்ள சமயங்கள் அனைத்துமே ஏழை எளியோர்க்குத் தான, தருமம் செய்யப் பணிக்கின்றன. இறையருள் பெற அதுவும் ஒரு வழி எனப் போதிக்கின்றன. ஆனால், இஸ்லாம் இத்தகைய தான, தருமங்களை முறைப்படுத்தி கட்டாயக் கடமையாக்கி, அவற்றை யார் யாருக்கு எவ்வகையில் வழங்குவது என்பதற்கான வழிவகைகளையும் செம்மையாக அமைத்துள்ளது.

புனிதமிகு ரமளான் பெருநாள் ஏழை எளியோர்க்கு ஈத்துவக்கும் திருநாளாகவும் அமைந்துள்ளது. ஜகாத் முறையானது உண்மையிலேயே ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்’ அரிய வாய்ப்பை ஒவ்வொருவருக்கும் உருவாக்கித் தருகிறது.

‘ஜகாத்’ மூலம் பொருள் தூய்மை

‘ஜகாத்’ என்பது ஆன்மீகத் தொடர்பு கொண்ட பொருளியல் கடமை மட்டுமன்று. இஸ்லாத்தின் அதியற்புத பொருளாதாரக் கொள்கையுமாகும்.

தொழுகையாகிய இறை வணக்கத்தின் மூலம் மனித உள்ளம் இறையுணர்வால் பூத்துக் குலுங்குகிறது. மனமாசு அகல்கிறது. நல்லுணர்வுகளின் அடிப்படையில் நற்குணங்கள் பொங்கிப் பொழிகின்றன. இதனால் மனித மனம் மட்டுமல்லாது ஆன்மாவும் தூய்மை பெறுகிறது. அதே போன்றுதான் உழைத்துத் தேடிய பொருள் தூய்மையடைய குறிப்பிட்ட சதவீதத்தைக் கட்டாயமாக இல்லாதோருக்கு வாரி வழங்கப் பணிக்கிறது இஸ்லாம். இதன் மூலம் வழங்க விழையும் உள்ளமும் வழங்கப்படும் பொருளும்