பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

அப்பாற்பட்டதொன்றாகும் என்பதனை மணவை முஸ்தபா விளக்குகின்றார். ‘உங்களுக்கு உங்கள் மார்க்கம், அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்’ என்பது பெருமானாரின் கூற்று. “அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப்பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்" (குர் ஆன் 6 :108)

“நபியே, நீர் கூறும் : இந்த வேதத்தை விரும்பியவர் விசுவாசிக்கலாம்; விரும்பாதவர் நிராகரித்துவிடலாம்” (குர்ஆன் 18:29) போன்ற திருவசனங்களைத் தமது நூலில் ஆசிரியர் பகிர்ந்துகொள்கின்ற வேளையில், அதைக் கருத்தூன்றிப் படிப்பவர்களின் கண்கள் நிலைதூக்கி நின்று விடும். இஸ்லாத்தைப் பற்றி தவறான கொள்கைகளையுடைய கல்நெஞ்சங்கள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிக்கட்டியைப்போல் உருகிப் போய்விடும்.

இஸ்லாத்தின் எந்த நிர்ப்பந்தமும் வலுக்கட்டாயமும் இல்லை. அவரவர்களுடைய எண்ணத்திற்கும் அறிவிற்கும் பாங்கிற்கும் ஏற்ப ஏற்றுக்கொண்டுள்ள சமயங்களுக்கிடையே மாச்சரியங்களை உருவாக்குவதையும் ஒரு சமயத்தவர் பிறிதொரு சமயத்தைத் தாழ்த்திப் பேசுவதையும் நபிகள் பெருமானார் அறவே எதிர்த்தார்.

மக்கா நகரிலிருந்து மதினா நகரத்திற்கு நபிகள் பெருமானார் சென்று அடைந்தபோது அந்நகரத்தில் மக்கள் பல பிரிவினர்களாக வாழ்ந்தனர். பெருமானார் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வோர் இஸ்லாத்திற்கு முன் தோன்றிய இயேசு பெருமானின் கிறித்துவம் மற்றும் அதற்கு முன் ஆபிரகாம், மோசே என்னும் முற்பிதாக்களால், முனிவர்களால் நிலை நிறுத்தப்பட்ட யூதம் - மற்றும் அரபு தேசத்தில் விக்ரக ஆராதனையை அடிப்படையாகக் கொண்ட சமயச்சார்பு உடைய அனைத்து மக்களை