பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178


மனித குலம் முழுவதையும் ஒரே இனமாகப் பாவிக்கப் பணிப்பது இஸ்லாமிய மார்க்கம் அறிவாற்றலாலும் உழைப்புத் திறனாலும் பொருளிட்டி பொருளாதார வசதியோடு வாழும் செல்வந்தர்கள், பொருளாதாரத்தில் தாழ் நிலையடைந்த ஏழை, எளிய மக்களின் இடர்களை கலைவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும். அவ் வேழை மக்களையும் உடன்பிறந்த சகோதரர்களாகக் கருதி, பொருளுதவி செய்து, அவர்தம் பொருள் வள உயர்வுக்குத் துணை நிற்க வேண்டும். அப்போதுதான் ஒரே குலமாகக் கருதிப் போற்றப்படும் மனித இனம் ஏற்றத் தாழ்வுகளை அகற்றிப் பொருளியல் சமநிலை பெறமுடியும்.

இதன்மூலம் ஒவ்வொரு முஸ்லிமும் தனக்காக மட்டும் வாழும் தன்னல உணர்வுக்கு மாறாகப் பிறர்க்கென வாழும் பேராண்மையாளனாகவும் மாறி வாழும் தாராள மனதைப் பெற முடிகிறது.

தனிவுடைமையில் பொதுவுடைமை

ஒவ்வொரு முஸ்லிமும் முயன்று உழைத்துப் பொருளைத் தானாகத் தேடிச் சேமிக்கிறான். ஆனால், அச்செல்வம் முழுமையும் அவனுக்கே சொந்தம் என இஸ்லாம் கருதவில்லை. அச்செல்வத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத எங்கோ இருக்கும் ஏழை, எளியோர்க்கு அச்சொத்தில் பங்குண்டு என விதிக்கிறது இஸ்லாம். அந்தப் பங்குத் தொகையாகிய ஜகாத் தொகையை இடது கை தருவது வலது கைக்குக் கூடத் தெரியாவண்ணம் கொடுக்கப் பணிக்கிறது இஸ்லாம். இதன் மூலம் உணர்வு அளவில் மட்டுமல்லாது செயலளவிலும் மனித குலம் முழுமையும் ஒரே இனம் என்பதையும் அவர்களிடையே ஏற்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அவர்களே நிறைவு செய்து சமப் படுத்தி, சமத்துவ நிலையடைய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமின்