பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

181

தேவைகளை நிறைவு செய்துகொள்ள ஜகாத் தொகையைப் பெற உரிமையுடையோராகின்றனர். ஐந்தாம் பகுதியினர், கொத்தடிமை போன்றோர், தங்கள் அடிமைத் தளையி லிருந்து விடுதலை பெற ஜகாத் பொருளுதவி பெற தகுதி யுடையோராவர். ஆறாவது பகுதியினர் சமுதாய நலன் பொருட்டுக் கடன்பட்ட கடனாளிகளும் ஜகாத் தொகைக்கு உரிமையுடையோராவர். ஏழாவது பகுதியினர், இறை நெறியின்பால் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டோரும் இறைவழிக்கு மக்களை அழைத்து செல்ல விழையும் இறை மார்க்க அழைப்பாளர்களும் ஜகாத் தொகைக்குரியோர் ஆவர். நல்ல நோக்கத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பயணிகள் இடை வழியில் பொருள் தட்டுப்பாட்டுக்கு ஆளாகி வருந்தி நிற்கும் வழிப் போக்கர்கள் ஜகாத் தொகை பெற தகுதியுடையோராவர்.

ஜகாத் தொகை வசூலும் விநியோகமும்

ஜகாத் தொகை எவ்வாறு வசூலிக்கப்பட வேண்டும், எவ்வகையில் உரியோர்க்கு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதற்கும் தெளிவான வழிமுறைகளை இஸ்லாம் வகுத்துக் கூறுகிறது.

தொடக்கக் காலத்திலிருந்து இஸ்லாமிய அரசுகளே செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் தொகையை வசூலித்து, அத்தொகைக்குரியோர்க்குப் பங்கிட்டு அளித்து வந்தது. இதன் மூலம் ஜகாத் கொடுப்போரும் வாங்குவோரும் மறைபொருளாயினர். இடைக்காலத்தில் ஜகாத்தை நேரிடையாகவே வழங்கிக் கொள்ளும் பழக்கம் எப்படியோ தலைதூக்கி நிற்கலாயிற்று. தற்போது இந்நேரடி முறை இஸ்லாமிய நெறிக்கு முரணானது என்பதை உணர்ந்த இஸ்லாமிய நாடுகள் இஸ்லாமிய நெறி முறைக்கேற்ப