பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
 



சமய நல்லிணக்கத்துக்கு
எது தடை?


அழகுமிகு ஹவாய் தீவு

அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பசிபிக் மாகடலில் அமைந்துள்ள தீவான ஹவாய்த் தீவுக்கு மூன்றாவது முறையாக என் துணவியாரோடு சென்றிருந்தேன். தீவின் அழகும் அமைதியும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்வதாக இருந்தது. சென்ற மறுநாள் சுற்றுலாக் குழுவொன்றோடு தீவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

உலகிலேயே அழகான
நீண்ட கடற்கரை!

ஹவாய்த் தீவைச் சேர்ந்த வழிகாட்டியாக வந்த பெண்மணி மணல் நிறைந்த கடற்கரையை அணுகியபோது “உலகிலேயே மிக அழகான நீண்ட கடற்கரை இது” எனக் கூறி ஹோனலுலு நகருக்கு வெளியே அரை கிலோ மீட்டர் நீளம் கூட இல்லாத கடற்கரைப் பெருமையைப் பற்றிக் கூறி முடிக்குமுன், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர். “இதைவிட அழகான நீண்ட கடற்கரை இந்தியாவில் மெட்ராஸ் நகரையொட்டி அமைந்துள்ளது” என விரைந்து