பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

197

களே என இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இஸ்லாமிய மரபுப்படி முதல் மனிதரும் முதல் இறைதூதருமான ஆதாம் நபி தொடங்கி, இறுதி நபி அண்ணல் நபிகள் நாயகம் வரை ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்கள் - தீர்க்க தரிசிகள் - இறைதூதர்களாக மக்களுக்கு நேர் வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டு உள்ளனர்.

“அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்கவில்லை.” (35:24).

“ஒவ்வொரு வகுப்பினருக்கும் (நம்மால்) அனுப்பப்பட்ட ஒரு தூதர் உண்டு” (10:47) எனக்கூறும் திருக்குர்ஆனின் இவ்விரு வசனங்களிலிருந்து உலகெங்கும் உள்ள எல்லா நாடுகளிலும் எல்லா இனத்திலும் இறை தூதர்கள் தோன்றி, மக்களை நல்வழிப்படுத்தியிருக்கிறார்கள் என்ற பேருண்மை வெளிப்படுகிறது.

இவர்கள் மூலமே இறைவேதங்களும் அவ்வக் காலகட்டத்திற்கேற்ப இறக்கியருளப்பட்டுள்ளது என்பதும் திருக்குர்ஆன் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இவ்வேதங்கள் அவரவர் தாய்மொழியிலேயே இறைவனால் வழங்கப்பட்டுள்ளன என்பதை,

“நபியே! ஒவ்வொரு தூதரும் தம் மக்களுக்குத் தெளிவாக விவரித்துக் கூறும் பொருட்டு, அவரவருடைய மக்களின் மொழியைக் கொண்டே (போதனை புரியுமாறு) நாம் அவர்களை அனுப்பி வைத்தோம், ! (14:4) எனத் திருக்குர்ஆன் மொழிகின்றது. இதிலிருந்து மண்ணுலகின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் அவரவர் தாய்மொழியிலேயே இறை வேதங்கள் இறை தூதர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.

அவ்வகையில் இந்தியாவிலும் பலப்பல இறை தூதர்களும் இறை வேதங்களும் வந்திருக்கலாம் என்பதில்