பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கூறிவிட்ட போதிலும் வந்து போன கிறிஸ்துவை இன்னும் அவர்கள் மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஈசாநபி மண்ணுலகைவிட்டு விண்ணுலகு ஏகிடும்முன்னர் ஓர் தேற்றரவாளனை அனுப்புவேன் என்று கூறிச்சென்றார். அந்தத் தேற்றரவாளன் தான்தான் தூய ஆவியர் என்று கூறப்படும் பரிசுத்த ஆவியானவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களோ இயேசு கூறிச் சென்றது முகமதுநபியைக் குறித்து என்று எண்ணுகின்றனர். அவர்கள் நம்புகின்ற அளவில்தான் ஈசாநபி அடையாளம் காட்டிச் சென்ற நபிகள் நாயகம் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளதை நாம் கண் கூடாகக் காண்கின்றோம். பூர்வகாலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் முற்பிதாக்கள் மூலமாய்த் தீர்க்கர்கள் வழியாய்த் தம்மை வெளிப்படுத்திய இறைவன் ஈசா நபி மற்றும் முகமதுநபி (சல்) அவர்களின் வழியில் தம்மை வெளிப்படுத்தியுள்ளார் என்ற இஸ்லாத்தின் ஆணித்தரமான கருத்துகள் ஆசிரியரின் எழுத்தோவியங்களில் கோடிட்டுக் காட்டப்பட்டு உள்ளன.

இறைவன் தனக்க அருளியுள்ள உண்மைகளை நிலை நாட்ட பெருமானார் எடுத்துக்கொண்ட நல் முயற்சிகள் ‘நபிகள் நாயகம் காட்டிய இஸ்லாம்’ என்ற அதிகாரத்தில் (பக்கம் 99) அதிகமாகக் கூறப்பட்டுள்ளன.

பெருமானாருக்கும் அவருக்கு முந்திய நபிமார்களுக்கும் உள்ள ஒற்றுமை வேறுபாடுகள் பற்றி ஆசிரியர் அலசுகின்றார். நபிகள் நாயகம் அவர்கள் தம்மை ஒரு மனிதனாக மட்டுமே உலகத்திற்குக் காண்பித்தார். அவர்களுக்குப் பின் வந்தவர்களும் அவரை ஒரு நபி என்ற அளவிலே மட்டும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த அளவில் அவருடைய நடவடிக்கைகள் நபிகளின் வாழ்க்கையில் அமைந்து விட்டன.

ஏனைய முற்பிதாக்கள், தீர்க்கர்கள் நபிகளைப்போல், நபிகளிலிருந்து சற்று மாறுபட்டோராக நபிகள்நாயகம்