பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அவர்கள் ஒரு நல்ல குடும்பத் தலைவராக, நல்ல கணவராக, தந்தையாக, படை நடத்தும் தளபதியாக, சட்டம் இயற்றுபவராக, சட்டத்தைக் கடைப்பிடித்தவராக, ஆட்சித் தலைவராக வாழ்ந்து காட்டியவர் பெருமானார்.

நபிநாயகம் வாழ்ந்த காலத்திலேயே பள்ளிவாசலையும் மதினாவில் கட்டி 20 ஆண்டுகளாக குர்ஆனையும் முடித்து வைத்து, இஸ்லாத்தின் வழிபாட்டு முறைகளையும், மத நம்பிக்கைகளையும் தெளிவு பெற பிரகடனம் செய்து, கேள்வி கேட்டவர்களுக்குத் தக்க பதிலையும் கொடுத்து “ஹதீஸ்” வழியாக உலகிற்கு, உலக மக்களுக்குத் தாம் உலகிற்கு வந்த முழுச்செய்தியையும் விட்டுச் சென்றுள்ளார் அண்ணல் நபி (சல்) அவர்கள். தாம் நிறுவிய சமயத்தின் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள நபிகள் நாயகம் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் தமது சமயத்தை அழித்துவிட போர்தொடுத்தவர்களை எதிர்த்துப் போராட அவர் தயங்கிடவுமில்லை. இறைவன் தன் மூலமாக உலகிற்கு அருளிய செய்தியைக் கருவிலேயே அழித்துவிடத் திட்டம் தீட்டியவர்களைக் களத்தில் சந்தித்து மடங்கடித்தார். இப்பணியில் இறைவனின் பாதுகாப்பும் அவருக்கு இருந்தது என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்து உரைக்கின்றார். ‘சிலந்தியும் புறாக்கூடு’ சம்பவமும் பக்கம் (106) இதற்கு ஒரு நல்லுதாரணமாகும்.

தனது பள்ளி வாசலில் தன்னைத்தேடி வந்த கிறிஸ்தவ பாதிரிகள் குழுவினரைத் தனது பள்ளிவாசல் வளாகத்தில் தங்க வசதி செய்து கொடுத்து, கிறிஸ்தவ முறைப்படி தொழுகை செய்திடவும் மனப்பூர்வமாக அனுமதித்த பெருமானாரின் பரந்த உள்ளத்தைக் காணுமிடத்து நபிகள் நாயகம் அவர்களுக்கு ஒரு சலாம் அடிக்க வேண்டும் என்று தோன்றுகின்றது.

தனது தோழர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த பெருமானார் யூதர் ஒருவரின் இறந்த சடலம் அவ்