பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

வழியாகத் தூக்கி வருவதைக் கண்டதும் எழுந்து நின்று மரியாதை செய்ததன் மூலம் நபிகள் நாயகம் எந்த அளவுக்கு ஒர் உயர்ந்த மனிதர் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.

நபிகளின் ஈகைக்குணம், சிக்கன வாழ்வு மற்றும் ஏழைகள், திக்கற்றவர்கள், விதவைகள் மீது அன்பையும், பரிவையும் காட்டிய பண்புச் செயல்கள் இன்றும் அப்படியே ஒவ்வொரு முஸ்லிம் மீதும் படிந்திருப்பதை நாம் காண முடியும்.

‘யாரிடமிருந்து மனிதகுலத்திற்கு நன்மை கிடைத்துக் கொண்டு இருக்கின்றதோ, அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்’ என்ற நபிகளின் திருவாக்கியத்திற்கு ஏற்ப தனக்கென்று வாழாது பிறர்க்கென்று வாழும் சிறந்த மானிடர்களை இந்த இருபதாம் நூற்றாண்டில் வலை வீசித் தேடிக் கொண்டிருக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம். அர்த்தமுள்ள மதம் இஸ்லாம் என்பதை நமக்குத்தெரிய வைக்கின்றார் ஆசிரியர்.

நண்பர் மணவை முஸ்தபா அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஏடுகளில் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் நமது கையில் தந்திருக்கின்றார். இதற்கு முன்பு இவற்றைப் படித்தோரும் படியாதோரும் பயனடையும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

எந்த அதிகாரத்தைப் புரட்டினாலும், எந்த ஆய்வுக் கட்டுரைகளை வாசகர்கள் படித்தாலும் இஸ்லாம் எந்த அளவில் ஒரு அர்த்தமுள்ள மதம், பொருத்தமுள்ள மதம், எந்த மண்ணுக்கும் எக்காலத்திற்கும் ஏற்ற சமயம் என்ற கருத்துகள் மீண்டும் மீண்டும் பளிச்சீட்டுக் கொண்டிருப்பதை வாசகர்கள் காண இயலும்.