பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

மனிதகுலம் முழுவதும் இறைவனின் குடும்பம், நம் அனைவருக்கும் ஆதித் தந்தையர் ஆதாமும் ஏவாளும் ஆவர். அவர்களிலிருந்து எத்தனைக் கோத்திரங்கள் கிளைகள் தோன்றியிருந்தாலும் நம் அனைவருக்கும் விசுவாசத் தந்தையாகிய ஆபிரகாம், அவருக்குப் பின்வந்த மூசாநபி, தாவூத் நபி, ஈசாநபி ஆகியவரது வரலாற்று வழி நின்று இறைவன் தமது வரலாற்றைப் படைக்கின்றான். இன்னும் படைத்துக்கொண்டு இருக்கின்றான் என்னும் மாபெரும் உண்மையைத் தமது ஆய்வுக்கட்டுரைகளில் ஆங்காங்கு பிட்டுப்பிட்டு வைக்கின்றார் ஆசிரியர்.

இஸ்லாத்தின் ‘ஐந்து தூண்கள்’ என்று கூறப்படும் ஈமான் எனும் இறை நம்பிக்கை, தொழுகை எனும் இறை வணக்கம், நோன்பு எனும் விரதம், ஜக்காத எனும் தர்மங்கள், ஹஜ் எனும் புனிதப்பயணம் ஆகிய இந்த ஐம்பெரும் கடமைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் எந்த அளவில் ஒரு முஸ்லிமின் மனோ வாக்குச் சிந்தனைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன, சீர்செய்யப்படுகின்றன என் பதை விளக்குகின்றார். கடுமையான சமய விதிகளுக்குத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளாத எவனும் கடிவாளம் போடாத ஒரு குதிரையைப் போலத்தான் காணப்படுகின்றான்.

விஞ்ஞான ரீதியில் இக்கடமைகள் ஒவ்வொன்றுக்கும். ஆசிரியர் விளக்கம் கூறுமிடத்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற நம்பிக்கையின் அவசியத்தையும் அந்த இறைவனை ஏனோதானோ என்று அல்ல, ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுதுகொள்ள வேண்டும் என்ற கண்டிப்பு எல்லாம், ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கும் ஒவ்வொருவருக்கும் அவசியமாகக் காணப்படுகின்றன.

வருடத்தில் ஒருமாதம் கடைப்பிடிக்கப்படும் விரதத்தின் மூலம் மனித சரீரத்தின் ஒவ்வொரு உறுப்புகளுக்கும்