பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

நாட்டிட உலக வரலாற்றில் இஸ்லாம் ஆற்றியுள்ள பங்கினை வேறு எந்தச் சமயங்களும் சமூக அரசியல் இயக்கங்களும் ஆற்றிடவில்லை என்பதை அடித்துக் கூறிட முடியும். குறிப்பாக இந்தியாவில் வர்ணாசிரம தர்மம் என்னும் சாபக்கேட்டிற்கு முதல் சாவு மணி அடித்ததே இஸ்லாம் தான்.

இஸ்லாம் ஒரு வெறும் சமயம் அல்ல; நாட்டில், சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக உள்ள ஏற்றத்தாழ்வுகளை, மேடு பள்ளங்களை, சமூகச்சரிவுகளை சமப்படுத்தும் ஓர் போர்ப்படை மூடநம்பிக்கைகளுக்கும், மதங்களுக்கும் மதத்தைத் படைத்த ஆச்சாரியர்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கும் இருட்டுப் பகுதிகளுக்கு இஸ்லாம் கிறிஸ்துவைப் போல் வெளிச்சம் தரும் மின் விளக்கு. திசைதெரியாத கப்பலுக்கு கலங்கரை விளக்கு. இஸ்லாம் எகிறிப் பாய்ந்தும் எல்லை மீறாதிருக்கிற கடல். நண்பர் வலம்புரி ஜானின் பாணியில் கூறப்போனால், இஸ்லாம் இந்த மண்ணுக்கு மாத்திரம் அல்ல எந்த மண்ணுக்கும் ஏற்ற மார்க்கம். அர்த்தமில்லாத மதங்கள், மதக் கொள்கைகள் உலகில் உண்டு. ஆனால் இஸ்லாமோ அர்த்தமுள்ள, பொருத்தமுள்ள மார்க்கம்.

இந்த அரும்பெரும் தத்துவங்கள் அடங்கிய கருத்துப் பெட்டகமாம் “பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்” என்னும் இவ்வரிய நூலைப் படைத்துள்ள நண்பர் மணவை முஸ்தபா அவர்களுக்கு எனது நல்லாசி.

மதத்தின் பெயரால், ஆண்டவன் பெயரால், சமயத்தின் பெயரால் பல கெடுபிடிகளை இந்நாட்டில் உண்டாக்கிக் கொண்டு இருக்கும் தீய சக்திகளை எதிர்த்துப் போராடுவதில் எந்த பயனும் இல்லை. அவர்களை அடையாளம் கண்டு கொண்டு சற்று ஒதுங்கி நிற்பதே மேல் என்ற கருத்