பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சாதனத்தால் தத்தம் சொந்த வாழ்க்கையிலும், சமூகத்திலும் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றத்தை நினைவு கூர்ந்து மனம் நெகிழ்ந்து பேசினார்கள். அவருக்கு நன்றி பாராட்டும் வகையில் ஒரு நினைவுச்சின்னம் எழுப்ப உறுதி பூண்டார்கள். அந்த நினைவுச் சின்னத்தை எப்படி எழுப்பினார்கள் தெரியுமா?

விலை உயர்ந்த பனிங்குக் கற்களைக் கொண்டு சுவர்கள் எழுப்பினார்கள். அதன் மேல் பொற்கூரை வேயப்பட்ட ஓர் அழகிய விதானம். வாசல் நிலைமீதில் நவரத்தினம், வழி நடையெல்லாம் பட்டுக்கம்பளம், தூணில் அழகியதாய் துய்ய நிறத்தினதாய் அமைந்த அந்த மண்டபத்திற்கு அறிஞரின் பெயரைச் சூட்டினார்கள். ஒரு துளி கூட வெயில் நுழைய முடியாத அந்த மண்டபத்தில் சூரியக் கடிகையை நிறுவினார்கள்.

விளைவு? வெயில் இல்லாததால் நிழல் இல்லை. நிழல் விழாததால் நேரம் தெரியவில்லை. மீண்டும் குழப்பம்; பூசல், கலவரம், அமைதி சீர் கெடவும், பொருளாதாரம் பின்னோக்கிச் செல்லவும் அந்த அறிஞரது நினைவுச் சின்னமே காரணமாயிற்று. மதங்களையும், நமது மக்களையும் பற்றி எண்ணும்போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் மின்னும். சக மனிதர்களிடம் அன்பு பாராட்டுமாறு போதிக்காத மதம் எதுவுமேயில்லை. ஆனால் மதத்தின் பெயராலேயே சுரண்டல் இருப்பதை நாம் அறிவோம். இரக்கத்தையும், கருணையையும், நீதி யையும் மேற்கொள்ளுமாறு எடுத்துச் சொல்லாத மதங்களேயில்லை, என்றாலும் வகுப்புக் கலவரங்கள் மூளும் போது பிஞ்சுக் குழந்தைகள் கூட வெட்டிக் கொள்ளப் படுவதைப் பற்றி படிக்கிறோம்.

நாட்டில் மதவாதம் தலைதூக்காது இருக்க வேண்டுமானால் மதங்களைப் பற்றி எவரும் எழுதவோ, பேசவோ கூடாது எனத் தடைவிதிக்கப் பட வேண்டும்