பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கடலைக் கடக்க முற்படுவதற்கு ஒப்பாகும். இத்தகு மறை பொருள்கள் போக, மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுதலுக்கு வேண்டிய அறிவுரைகள் அறவுறைகளெல்லாம் எளிதில் புரியுமாறு தெளிவாகவே அமைந்துள்ளன. இவற் றில் எங்குமே மனித நேயத்தை வளர்க்கும் பான்மை - மனிதகுலம் முழுவதுமே ஆதி பிதா ஆதம் (அலை) அவர் களின் சந்ததி என் வலியுறுத்தி, மனித சகோதரத்துவத்தை வளர்ப்பதாகவே அமைந்துள்ளது. இத்தகு நீதி மறையும், அதனைப் பின்பற்றுவோரும் எவ்வாறு தவறாகக் கணிக் கப்படுகின்றனர் என்பது தான் வியப்புக்கும் வேதனைக் குறியதுமாகும்.

உலகத்தில் எங்கே கொடுமை நிகழ்ந்தாலும், இந்த நேரிய திருமறையைப் பின்பற்றி அக்கொடுமையை அகற்ற முஸ்லிம்கள் முற்பட்ட சம்பவங்களை வரலாற்றில் நெடுகிலும் காண முடியும். ஒரு சான்று :

நபிகள் பெருமானார் காலமான ஒரு நூற்றாண்டுக்குள் இஸ்லாமிய ஆட்சி உலகின் செம்பாகத்தில் வியாபித்து இருந்தது, அக்காலத்தில் பைஸாந்தியத்தில் கிறிஸ்தவர்களில் ஒரு பிரிவார், வேறொரு பிரிவார்தம் ஆலயங்களில் சிலை வணக்கஞ் செய்கின்றனர் என்று இவர்களின் கோவில்களை அழித்தனர். முஸ்லிம்களும் சிலை வணக்கத்தை எதிர்ப்பவர்கள்தாம். ஆனால், அவற்றை வணங்குவோரின் ஆலயங்களை அழிப்பதற்கு அவர்களுடைய மார்க்கச் சட்டங்கள் இடந்தரா. அக்காலை முஸ்லிம்கள் நம் ஆட்சியிலிருந்த கிறிஸ்தவ ஆலயங்களைப் பாதுகாத்தமைப் பற்றி அமெரிக்க வார இதழ் டைம் (TIME) இவ்வாறு ‘நினைவு’ கூர்கிறது.

“பைஸாந்திய ஆட்சியிலிருந்த ஆலயங்களில் சிலைகள் பேரரசன் லியோ இஸுரியனின் கட்டளையினால் அழிக்கப்பட்டன. அப்போது மவுண்ட் ஸினானயிலிருந்த ஒரு மடாலயம் தப்பித்தது; ஏனெனில், இது உமைய்யா