பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அதுதான் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் கீழ்த் திசை நாடுகளின் சரித்திரங்களையும், சமயக்கோட்பாடுகளையும் பண்பாடுகளையும் மாண்பார் சாதனைகளையும் மாசுபடுத்திடீத் தம் ஆதிக்கங்களை நிலை நாட்டிட உருவாக்கிய வரலாறுகளின் சதிச் செயல்களாகும். அந்த ஏகாதி பத்தியங்களின் ஆதிக்கத்தில் இருந்த கீழ்த்திசை நாடுகளில் அவ்வரலாறுகளின் தாக்கம் இல்லாமற் போகுமா?

“பொய்மைத் தொழுதடிமை செய்வார்” புனைந்த இவ்வரலாறுகள், உண்மையான சரித்திரங்கள தோன்றத் தொடங்கியதும், படிப்படியாக மறைந்து வருகின்றன.

இம்மாதிரிப் பொய்க் கூற்றுகள் மறைந்தே தீரும் என்பதை திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

“இன்னும் சத்தியம் வந்துவிட்டது, அசத்தியம் அழிந்து விட்டது; நிச்சயம் அசத்தியம் அழிந்தே விடும்,” என்று (நபியே மக்களுக்கு) நீர் கூறுவீர்ராக! (17:81)
இத்தகைய சத்திய வேட்கையின் பாற்பட்ட மணவை முஹம்மது முஸ்தபா அவர்களின், “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்னும் அரிய தொகுப்பு, அளப்பரும் பயனை அள்ளித்தருவது. அதனை வரவேற் கிறேன், வாழ்த்துகிறேன்.
வ ஆகிரு தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்

10-2-1414
30-7-1993
சென்னை - 600 016.

அப்துல் வஹ்ஹாப்