பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மாநபி முஹம்மது நபி (சல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் மனித குலத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் ஒளி விளக்காக அமைந்துள்ளதெனலாம்.

மற்ற துறைகளைப் போன்றே பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமும், மனிதகுலம் ஏற்றிப் போற்ற வேண்டிய ஒருமைப்பாட்டுணர்வும் ஒப்பற்ற வழி காட்டியாக மனித குலத்துக்கு விளங்கி உலகை வழி நடத்து கின்றன.

பெருமானாரின் பிற
சமயக் கண்ணோட்டம்

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டமும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடும் உலகிலுள்ள அனைத்துச் சமயங்களையும் மரியாதைக்குரியவையாகவே காட்டுகின்றன. பிற சமயத்தவர்களின் வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றும் வேதங்கள், அவர்கள் மேற்கொள்ளும் சடங்குகள் ஆகிய அனைத்தையும் மதிக்கப் பணிக்கிறது இஸ்லாம். அவற்றைப் பற்றித் தவறாகப் பேசுவதைத் தடுக்கிறது.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகின்றார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (குர்ஆன் 6 :108)

அவரவர் மார்க்கம்
அவரவர்க்கு

அவர்கள் மார்க்கத்தை அவரவர் வழியில் பேண இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது. இதைப் பற்றி திருமறையான திருக்குர்ஆன்,

“உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மார்க்கம்” என எடுத்துக் கூறுகிறது.