பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

இதற்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியொன்று அண்ணலார் வாழ்வில் நடைபெற்றது.

ஒரு சமயம் பெருமானாரை நேரில் கண்டு அவருடன் பேச மதினாவிலுள்ள பள்ளிவாசலுக்குப் பாதிரிகள் குழுவொன்று வந்தது. அதில் பிரதம பாதிரியார் உள்பட நாற்பது கிருஸ்தவப் பாதிரியார்கள் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து பெருமானாரோடு பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருந்தது. எனவே, அந்தத் பாதிரிமார்களை பள்ளி வாசல் வளாகத்திலேயே தங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் பெருமானார். தக்க வசதிகளைச் செய்து கொடுத்துத் தங்க வைத்துக்கொண்டார்.

அந்தப் பாதிரிமார்கள் பிரார்த்தனை செய்யும் நேரம் வந்தபோது, கிருஸ்தவ முறைப்படியான சடங்குகளோடு பள்ளிவாசல் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்து கொள்ளவும் மனப்பூர்வமாக அண்ணலார் அனுமதி அளித்தார். அங்கு வந்திருந்த பாதிரிகளும் பெருமானார் விருப்பப் படியே பள்ளிவாசல் வளாகத்திலேயே தங்கி, தங்கள் மத ஆசாரப்படி பிரார்த்தனையும் செய்து மகிழ்ந்தார்கள். இதன் மூலம் பிற சமயங்களை வெறுக்காதது மட்டுமல்ல. அவற்றை மதிப்பது இஸ்லாம் என்பது தெளிவாகும். நாயகத் திருமேனியின் வாழ்வும் அதையே வலியுறுத்துகிறது.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானதன்று” என்பது நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாக்கமுதாகும்.

கட்டாயத்துக்குக் கடுகளவும்
இஸ்லாத்தின் இடமில்லை

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில், யாரையும் இஸ்லாத்தின்பால் இழுத்ததாகக் கடுகளவு செய்தியைக்கூடக்