பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

காண முடியவில்லை. இஸ்லாத்தின் உன்னதமான கொள்கை, கோட்பாடுகளைக் கேட்டும் நெறிமுறைகளின் மேன்மையை அறிந்தும் இஸ்லாத்தின்பால் தங்களை இணைத்துக் கொண்டார்களேயன்றி, இஸ்லாத்தின்பால் யாரும் இழுக்கப்படவில்லை என்பதுதான் பெருமானார். வாழ்க்கையும் இஸ்லாமிய வரலாறும் தரும் செய்தியாகும். ஏனெனில், அவ்வாறு செய்வது இஸ்லாமியக் கொள் கைக்கு நேர் மாறானதாகும் என்பது திருமறையின் தீர்ப்பாகும்.

“இஸ்லாத்தின் நிர்ப்பந்தமே இல்லை” (குர்ஆன்-2 :256) என்பது திருமறைக் கோட்பாடு.

மேலும் இதைப் பற்றித் திருமறை,

“(நபியே!) நீர் கூறும் : (முற்றிலும் உண்மையான) இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம், விரும்பாதவர் (இதை) நிராகரித்துவிடலாம்.” (குர்ஆன் 18:29)

என்று கூறுவதன்மூலம் இஸ்லாமிய நெறியை மக்கள் ஏற்பது என்பது அவரவர் விருப்பத்தைப் பொருத்து அமைவதேயல்லாமல், கட்டாயத்திற்குக் கடுகளவு இடமும் இல்லை என்பது தெளிவு. இதற்கு மாறான எந்தச் செயலும் இஸ்லாமிய நெறிக்கும் நாயகத் திருமேனியின் வாக்குக்கும், வழிகாட்டுதலுக்கும் நேர் மாறானதாகும் என்பது தெளிவு.

உலகின் அனைத்துச் சமய
வேதங்களுக்கும் அங்கீகாரம்

உலக சமயங்களையும் அவற்றின் வேதங்களையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது. முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) தொடங்கி இறுதிநபி அண்ணல்