பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

இறையச்சமுடையவனாக, இறைவன் வகுத்தளித்த வழியில் வாழ்கிறான் என்ற அளவுகோல்களின் அடிப்படையில் அவன் உயர்வும் தாழ்வும் கணிக்கப்படுமே தவிர வேறு எவ்வகையிலும் அல்ல என்பது நாயகத்திருமேனியின் நல்லுபதேசத் திரட்டாகும்.

மனித குலம் முழுமையும்
இறைவனின் குடும்பம்

மனித குலம் முழுவதையுமே இறைவனின் குடும்பம் என இஸ்லாம் வர்ணிக்கிறது. மனிதர் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் உபகாரம், தொண்டு அவர் முஸ்லிமாக இருந்தாலும் அல்லாது மற்ற சமயத்தவராக இருந்தாலும் அச்சேவையை இறைவணக்கம் என்று இஸ்லாம் சிறப்பித்துக் கூறுகிறது.

“உங்களின் சேவைகளுக்கும் தொண்டுகளுக்கும் முதல் உரிமை பெறுபவர்கள் உங்களின் அண்டை வீட்டார், அடுத்து உங்கள் பகுதி மக்கள், அடுத்து நாட்டு மக்கள்,” என்பது இஸ்லாம் வகுத்தளித்துள்ள வாழ்க்கை நெறியாகும்.

“யாரிடமிருந்து மனிதகுலத்துக்கு நன்மை கிடைத்துக் கொண்டிருக்கிறதோ அவன்தான் மனிதர்களில் சிறந்தவன்” என்பது நபிகள் நாயகத்தின் திருவாக்காகும்.

நன்றி : தினமணி