பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

இஸ்லாமிய நோன்புக்கு பிற சமய விரதங்களுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டு.

பிற சமயங்களில் மாதத்தில் ஒரு நாளோ அல்லது ஒரு சில நாட்களோ அல்லது ஒரு சில மணி நேரங்களோ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிலும் வழக்கமாக உண்பவைகளில் சிலவற்றை நீக்கியோ அல்லது முழுமையாக உணவு மட்டும் உண்ணாமலோ விரதம் மேற் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான விரதங்களில் நீர் பருகத் தடையிருப்பதாகத் தெரியவில்லை.

ஆனால், இஸ்லாமிய நோன்பு ரமளான் மாத முதல் நாள் தொடங்கி அம்மாதம் முழுவதும் இடையறாது தொடர்ந்து முப்பது நாட்கள் நோன்பு நோற்கப்படுகின்றது.

இறையச்சயுணர்வூட்டும் நோன்பு

அதிகாலை நான்கு மணிக்கு முன்னதாகவே, உண்பதும் பருகுவதும் நிறுத்தப்படுகிறது. மீண்டும் முன்னிரவு ஆறரை மணிக்குத்தான் உண்ணவும் பருகவும் முடியும். இவ்வாறு தொடர்ந்து முப்பது நாட்கள் நிகழும். இம்மாதம் முழுவதும் பகற் பொழுதுகளில் ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்க வேண்டும். வழக்கமாக மேற்கொள்ளும் ஐவேளைத் தொழுகையுடன் ‘தராவீஹ்’ எனும் சிறப்புத் தொழுகை ஒவ்வொரு நாள் இரவும் ஒரு மணி நேரம் கூட்டுத் தொழுகையாக நிறைவேற்றப்படுகிறது. இந்நோன்பு நாட்களில் நோன்பாளிகள் முழுக்க முழுக்க இறைச் சிந்தனையாளர்களாக மாறிவிடுகின்றார்கள்.

ரமளான் மாத நோன்பு ஒவ்வொரு முஸ்லிமையும் படம் போட்ட தங்கமாக உருமாற்றும் செயற்பாடாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முஸ்லிம் உள்ளத்தில் இறையுணர்வு பூரணமாகப் பொங்கிப் பொழிவதோடு,