பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

ஹஜ் கடமை

இத்தகைய தியாக உணர்வுகளுக்கு மகுடம் சூட்டுவது போல் தியாகத் திருநாளின்போது நிறைவேற்றுவதாக ஐந்தாவது கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. சுய வருமானமும் நல்ல உடல் நலமும் உள்ள வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. சுய வருமானமும் நல்ல உடல் நலமும் உள்ள வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக ஹஜ் கடமை அமைந்துள்ளது. மக்காவிலுள்ள கஃபா இறையில்லம் சென்று மீள்தலே ஹஜ் கடமையாகும்.

ஹஜ் செய்யச் செல்லுபவர் தன் மனைவி, மக்கள் உற்றார் உறவினர் தான் தேடிய சொத்துக்கள் அனைத்தையும் விட்டு நீங்கிச் செல்கிறார். தான் வாழ்ந்த சுக வாழ்வைத் துறந்து கடின வாழ்வை விரும்பி மேற்கொள்கிறார். இதன்மூலம் தியாக உணர்வின் எல்லை நோக்கிப் பீடு நடை போடத் தன்னைத் தயார்படுத்திக் கொள்கிறார்.

உண்மைத் துறவை உணர்த்தும்
இஹ்ராம் வெள்ளுடை

இஸ்லாம் துறவறத்தைப் போற்றாவிடினும் தனக்கென உள்ள அனைத்தையும் துறந்த உணர்வின் வெளிப்பாடாக ஹஜ்ஜுக்குச் செல்லுபவர் தைக்கப்படாத ஒரு முண்டுத் துணியை இடுப்பில் அணிந்தும் மற்றொரு முண்டுத் துணியை உடல்மீது போர்த்திக் கொள்கிறார். இவ்வுடை ‘இஹ்ராம்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு ‘அனுமதிக்கப்பட்ட சில காரியங்களை நிறுத்திக் கொள்வது அல்லது விலக்கி (ஹராமாக்கி)க் கொள்வது’ என்பது பொருளாகும். இதன் மூலம் தான் மகிழ்ச்சியுடன் அனுபவித்துவந்த ஆடம்பர வாழ்வை, அலங்கார அணிமணி