பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

நிறைவேற்றிய முஸ்லிம் பெருமக்கள், தங்கள் வாணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பான காலமாக முஹர்ரம் மாதம் அமைந்திருந்ததால் ‘ரபியுல் அவ்வல்’ மாதத்திற்குப் பதிலாக வாணிபத்திற்கான மாதமாகிய ‘முஹர்ரம்’ மாதம் ‘ஹிஜ்ரி’ ஆண்டின் முதல் மாதமாக அமைக்கப்பட்டது. இஸ்லாமிய நெறியும் அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்களும் உழைப்புக்குத் தந்த உன்னதத்தை உலக மக்களுக்கு நினைவூட்டும் மாதமாகவும் ‘முஹர்ரம்’ மாதம் அமைந்திருக்கம் பாங்கு எண்ணியெண்ணி வியந்து போற்றத்தக்கதாகும்.

அமைதி போற்றும் புனிதமிகு
மாதம் முஹர்ரம்

இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே அரபிகள் ‘முஹர்ரம்’ மாதத்தைப் புனிதமிகு மாதமாகக் கருதிவந்தார்கள். இம்மாதத்தின் கோபம், குரோதம்,வன்மம், பலாத் காரம், வன்முறை போன்ற உணர்ச்சிகளை நெஞ்சத்திலிருந்து அறவே நீக்கி அன்பு, அருள் அமைதி, சாந்தம், மகிழ்ச்சி ஆகிய உணர்வுகளை நெஞ்சத்தில் நிரப்பி வாழ வேண்டிய மாதமாக இம்மாதத்தைக் கருதி வந்தார்கள்.

இம்மாதத்தில் சண்டை, சச்சரவுகள் இல்லாது வாழ்வதில் கண்ணுங் கருத்துமாக இருந்தார்கள். போர் செய்வதை அறவே விலக்கி வாழ்ந்து வந்தார்கள். எனவே, வன் செயல் உணர்வற்ற, போர் விலக்கப்பட்ட, அதாவது ஹராமாக்கப்பட்ட புனிதமாதம் எனும் பொருளிலேயே ‘முஹர்ரம்’ எனும் பெயரமைந்துள்ளது.

மேலும், எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹTத் ஆலா தன் திருமறையாம் திருக்குர்ஆனில் புனித மாதங்களைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளான்.

“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை (ஒர் ஆண்டிற்கு) பன்னிரண்டுதான். இவ்