பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

இவ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து அல்லாஹ்வால் கற்பனை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 4 மாதங்கள் சிறப்புற்றவை. இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே, இவற்றில் (நீங்கள் போர் புரிந்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ள வேண்டாம்” (9:36) என இறைவன் தன் திருமறையில் அழுத்தத்திருத்தமாக, இம்மாதத்தில் போர்புரியக் கூடாதென விதித்துள்ளான்.

இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (சல்) அவர்கள், புனித மாதங்கள் நான்கு எனவும் அம்மாதங்களில் தவிர்க்க முடியாத நிலையில், தற்காப்புக்காக அன்றி மற்ற எக்காரணத்திற்காகவும் சண்டை, சச்சரவு கூடாது எனக் கூறியுள்ளார்கள். அந்த நான்கு மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று என்பது இம்மாதத்தின் புனிதமிகு தனித் தன்மையைக் காட்டுவதாக உள்ளது.

மறுமை நினைவூட்டும் முஹர்ரம்

அமைதி போற்றும் மாதமாக மட்டுமல்லாது மறுமை தினமாகிய இறுதித் தீர்ப்பு நாளை நினைவூட்டி மனித குலத்தை அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் மாதமாகவும் முஹர்ரம் மாதம் அமைந்துள்ளது.

மனுக்குலத்தின் இறுதித் தீர்ப்பு முஹர்ரம் 10-ம் நாளில் அமையும் என்பது இறைவாக்காகும்.

“என்றைக்குமாக நிலைத்திருக்கும் தன்மையற்றது இவ்வுலகம். இதில் இடம் பெற்றுள்ள எல்லாவற்றுடனும் ஒரு நாள் இந்நிலவுலகம் அழிந்தே தீரும்” என்பது திருமறை தரும் இறைவாக்கு.

எனவே, மனிதப் பிறப்பில் இறுதிக் குறிக்கோள் மறுமை தான். அந்த மறுமை வாழ்வு எவ்வாறு அமையும் என்பது இவ்வுலக வாழ்வினைப் பொருத்துள்ளது.