பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

நடத்த உலகெங்கும் இறை தூதர்கள் அவ்வப்போது இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து இருபத்திநான்காயிரம் என இஸ்லாமிய மரபு மொழிகிறது. இவர்கள் இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இனத்திலும் மொழியிலும் பிறந்து மக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். இவர்களுள் முதல் இறை தூதர் முதல் மனிதராகிய ஆதாம் (அலை) ஆவார். இறுதி நபி முஹம்மது (சல்) ஆவார். இஸ்லாமிய நெறியானது முதல் மனிதரும் நபியுமான ஆதாம் தொடங்கி வளர்ந்து வந்ததாகும். இஸ்லாமிய மார்க்கமாகிய இறைநெறியை நிறைவு செய்தவர் நபிகள் நாயகம் (சல்) ஆவார்.

இன்றையத் தேவை
சகிப்புணர்வே

இன்றைய மனிதகுல மாச்சரியங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைவது சகிப்புத்தன்மை இன்மையேயாகும். சிறுபான்மை சமய, இன, மொழி பேசும் மக்களிடையே பெரும்பான்மையினரும், அதேபோன்று பெரும்பான்மையினரிடம் சிறுபான்மையினரும் எவ்வாறு ஒத்திணங்கி சகிப்புணர்வோடு வாழ்ந்து வளம் பெறுவது என்தற்கு நாயகத் திருமேனியின் வாழ்வும், வாக்கும் அரிய சான்றாக அமைந்துள்ளதெனலாம். பல்வேறு இன, மொழி, சமயங்களைக் கொண்ட இந்திய மக்களிடையே சகிப்புணர்வு அழுத்தம் பெறவேண்டியது அவசிய, அவசரத் தேவையாகும்.

இந்திய சமயங்களின்
அடித்தளப் பண்பு

இந்திய சமயங்கள் அனைத்தும் சகிப்புணர்வையே பெரிதும் வலியுறுத்துகின்றன. இன்னும் சொல்லப் போனால் சமயங்களின் அடித்தளப் பண்பாக அமைந்துள்ள