பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

விரதங்கள் ஒருசில நாட்கள் மட்டுமே கடைப்பிடிக்கப்படுகின்றது. அவ்விரதங்களின்போது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரம் வரை உணவு உண்ணாமலோ அல்லது குறிப்பிட்ட உணவு வகைகளை உண்ணாது விலக்கியோ விரதம் கடைப் பிடிக்கப்படுகிறது. நீர் பருகத் தடையேதும் இல்லை.

மாதம் முழுமையும் நோன்பு

ரமளான் மாத நோன்பு அம்மாதம் முழுமையும், முப்பது நாட்கள் பகல் முழுவதும் இடைவிடாது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாள் பகற் பொழுதில் குறைந்தபட்சம் பதினான்கு மணி நேரம் நோன்பு நோற்கப்படுகிறது.

அதிகாலை வைகறை முதல் மாலையில் கதிரவன் மறையும்வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல் நோன்பு நோற்கப்படுகிறது. வழக்கமான பகற்பொழுது உணவுப் பழக்கங்கள் முற்றாக விலக்கப்படுகின்றன. புதைத்தல் முதலான செயல்கள் முழுமையாகக் கைவிடப்படுகின்றன. இவற்றை இரவு நேரத்தில் அனுபவிக்கத் தடையில்லை.

நோன்பு விதிவிலக்கும் சலுகையும்

ரமளான் நோன்பு நோற்பது முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்றியமையாக் கடமையாயினும் இயலாதவர்கட்கு இதில் விதி விலக்கும் சலுகைகளும் உண்டு.

கடுமையான நோய்வாய்ப்பட்டவர்கள், மூப்பின் எல்லையைத் தொடும் முதியவர்கள், குழந்தைகட்குப் பாலமுதுட்டும் தாய்மார்கள் நோன்பு நோற்பதினின்றும் விலக்குப் பெறுகிறார்கள்.

சாதாரண நிலையில் உடல் நலமில்லாதவர்களும் பயணிகளும் தவிர்க்க முடியாத காரணங்களால் ஓரிரு நாட்கள் நோன்பு நோற்க இயலாதவர்களும் நோன்பு நோற்காதிருக்க அனுமதி உண்டு. இவர்கள் விடுபட்ட