பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஒரே ஜமாத் (குழுமம்)தாக விளங்கி தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டுகிறார்கள்.

தனக்குத்தானே தடை

நோன்புக் காலத்தில் நோன்பாளி நோன்பு வைக்கும் போதும் முடிக்கும்போதும் வேண்டுமானால் பலரோடு இருக்கும் வாய்ப்பைப் பெறலாம். பிற சமயங்களில் தனியாக இருக்கும் வாய்ப்பே மிகுதி. அத் தனிமைச் சந்தர்ப் பங்களில் யாருக்கும் தெரியாமல் சிறிதளவு உண்ணவோ சிறிது நீர் பருகவோ முடியும். ஆனால், நோன்பாளி அத்தகைய சிந்தனை அறவே இல்லாதவனாக, கடுமையான மனக்கட்டுப்பாட்டுடன் நோன்பு நோற்கிறான். இதற்குக் காரணம் நோன்பாளி மனிதர் பார்வையிலிருந்து மறைவாக இருந்த போதிலும் இறைவனின் நேரடிப் பார்வை எப்போதும் தன்மீது படிந்திருந்திருப்பதாகக் கருதும் மனநிலையும் நம்பிக்கையும் கடமை உணர்வும் இறையச் சமுமேயாகும். இதனால் ஒவ்வொரு நோன்பாளியும் மிகுந்த மனக்கட்டுப்பாட்டுடன் தனக்குத்தானே தடை விதித்துக் கொண்டு நோன்புக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி மகிழ்கிறார்.

மனக்கட்டுப்பாட்டு
ஊற்றுக்கண் நோன்பு

நோன்பிலா நாட்களில் ஒவ்வொரு நாளும் வகை வகையான சுவை மிகு உணவு வகைகளை வேளைதோறும் உண்டு மகிழ்ந்திருக்கலாம். காபி, டி, போன்ற சுவை நீர்களை வகைவகையாகப் பருகி இன்புற்றிருக்கலாம். பீடி, சிகரெட், புகையிலை, பொடி எனப் பலவற்றைப் புகைத்தும் சுவைத்தும் இன்பம் துய்த்திருக்கலாம். ஆனால், நோன்புக் காலத்தில், இவைகளில் எதையுமே மனம் நினைத்துக் கூடப் பார்க்கத் துணிவதில்லை. அந்த அளவுக்கு மனம் கட்டுப்பாடுடையது. இதினின்றும்