பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

ஐம்புலன்களை அடக்கியாலும் பேராண்மையை ஒவ் வொரு நோன்பாளிக்கும் வழங்குகிறது நோன்பு.

வாழ்நாள் பயிற்சி

நோன்பின் மூலம் இறையருளைப் பூரணமாகப் பெற வேண்டும் என்ற துடிப்புடன் இறைக் கட்டளைக்கேற்ப தன் மன இச்சைகளை ஒடுக்கி, தன் ஐம்புலன்களை அடக்கி வாழ நோன்பாளி முற்படுகிறார். நோன்பின் மூலம் இதற்கான சக்தியும் மனவலிமையும் அவரே வியக்கு மளவுக்கு நோன்பாளியிடம் மேலாதிக்கம் பெறுகிறது. ரமளான் மாத முப்பது நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்றுப் பெறும் இவ்வலிமை ஆண்டு முழுவதும் அவரிடம் அரசோச்சுகிறது. நாளடைவில் அதன் வலிமை குறையத் தொடங்கும். தருணத்தில் அடுத்த ஆண்டு ரமளான் நோன்பை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் அவ் வலிமையைப் புதுப்பித்துக் கொள்ள முடிகிறது. இவ்வாறு வாழ்நாள் முழுவதும் புலனடக்கத்தையும் மனக் கட்டுப்பாட்டையும் பெற்றவராக வாழ்வில் பொலிவோடு விளங்க முடிகிறது.

உடல்நோய் போக்கும்
உன்னத நோன்பு

ஆன்மீக, உளவியல் அடிப்படையில் மட்டுமல்லாது, அறிவியல் அடிப்படையிலும் நோன்பு பெரும் நன்மைகளை விளைவிப்பதாய் அமைந்துள்ளது.

நோன்பு முறையால் உடலில் வாட்டும் பல நோய்களின் வலிமை குறைகின்றன அல்லது குணமாகின்றன என்பது மருத்துவ உலகக் கணிப்பாகும்.

வைகறைக்கு முன்பு உண்ணும் உணவு சில மணிநேரத்துக்குள் நன்கு செரித்து விடுகிறது. இதன் மூலம் பல மணி நேரங்கள் செரிப்பதற்கு ஏதுமில்லா நிலையில் சீரண