பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

உறுப்புகளாகிய இறைப்பை, வயிறு, சிறுகுடல், பெருங் குடல் போன்றவை பூரண ஒப்பு பெறுகின்றன. சுத்தமடைகின்றன.

நோய் தோன்றவோ வளரவோ போதிய வாய்ப்பில்லா நிலை உருவாக இதன் மூலம் வழியேற்படுகிறது.

நோன்பின்போது நீரிழிவு போன்ற நோய்கள் கட்டுக்குள் அடங்கியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

சாதாரண நாட்களில் அதிக அளவில் உண்பதால் அளவுக்கதிகமாக உடலில் கொழுப்புப் பொருள் சேர உடல் பருத்துவிடுகிறது. இதனால் உடலின் இயற்கையழகு குன்று வதோடு பல்வேறு நோய்களுக்கும் இஃது வழியாயமைகிறது. இதன்மூலம், மாரடைப்பு போன்ற திடீர் மரணங்களும் சம்பவிக்கின்றன. நோன்புக் காலத்தில் குறைவான உணவே உட்கொள்ளப்படுவதால் இக் கொழுப்புப் பொருட்கள் கொஞ்சங் கொஞ்சமாகக் கரைகின்றன. இதன் வாயிலாக உடல் எடையும் பருமனும் குறைய உடல் கலகலப் படைகிறது.

மேலும், நோன்பு நோற்கும்போது குறைந்த அளவே உண்பதால் உடலில் ‘ஹார்மோன்’ சுரப்பும் ஒரு அளவுக்குள் அமைகிறது, இதனால் இரத்தக் கொதிப்புப் போன்ற நோய்கள் கட்டுக்குள் அடங்குகின்றன.

பசியின் கொடுமையை
உணர்த்தும் நோன்பு

சமூகவியல் அடிப்படையில் நோக்கும்போது பசித் திருப்போர் எத்தகைய கொடுமை அனுபவிக்கின்றனர் என்பதை செயல் பூர்வமாக நோன்பாளியை உணரச் செய்கிறது. இதை உணரும் செல்வ வளமிக்க நோன்பாளிகள் இல்லாதோரின் பசித் துயர் நீக்க அவாவுகின்றனர்.