பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ஜகாத் கடமைகளை இனிது நிறைவேற்றி ஏழை எளியவர்களை மகிழ்விக்க வேட்கை கொள்கின்றனர். ஏழை எளியவர்களின் சிரிப்பிலே இறைவனைக் காண உண்மையிலே முயல்கின்றனர். இல்லாதோருக்காக தாங்கள் முயன்று தேடி பொருளை தியாகம் செய்ய முனைகின்றனர்.

இவ்வாறு, இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற அவன் விதித்த வாழ்வியல் நெறிப்படி வாழ முனையும் முஸ்லிம் இறை வழியில் எவ்விதத் தியாகத்திற்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ள முயல்கிறார். தன் மன இச்சைகளை யெல்லாம் தூக்கி எறிகிறார். தன் பழக்க வழக்கங்களை யெல்லாம் முற்றாக மாற்றிக் கொள்கிறார். ஐம்புலன்களை அடக்கி ஆள்கிறார். பசியையும் தாகத்தையும் மகிழ்வோடு தாங்குகிறார். இம் முறையில் தன்னால் இயன்ற தியாகங் களையெல்லாம் இறைவனுக்காக மகிழ்வோடு நிறை வேற்றுகிறார். இதற்கான ராஜபாட்டையாக அமைந்துள்ளது ரமளான் நோன்பு, மனிதனை மாமனிதனாக, மாண்புடையவனாக, மனிதப் புனிதனாக உருமாற்றும் அருஞ் செயலை ரமளான் நோன்பு வெற்றிகரமாக நிறை வேற்றுகிறதெனில் அஃது மிகையன்று.

நன்றி : தினமணி