பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தியாகம் - சமத்துவம் - சகோதரத்துவம்


இஸ்லாத்தின் எழில்மிகு மாளிகை

இறை நம்பிக்கை, தியாகம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய நான்கு தூண்களின் மீது உயர்ந்தோங்கி விளங்குவதுதான் இஸ்லாம் எனும் எழில்மிகு மாளிகை.

இச்சிறப்புமிகு நான்கு அம்சங்களையும் ஒரு சேர உணர்ந்து தெளிய நடைமுறை நிகழ்வாக அமைந்திருப்பது தான், பக்ரீத் எனும் ‘ஈதுல் அள்கா’ பெருநாள்.

இறைவனால் படைக்கப்பட்டவைகளும்
மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும்
வணங்குதற்குரியவை அல்ல

சுமார் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பு ஆச்சார அனுஷ்டானமிக்க வைதீக குருமார் குடும்பத்தில் பிறந்து, ‘இறைவன் ஒருவனே. என் வாழ்வும் மரணமும் யாரிடம் உண்டோ அவனே வணங்கத்தக்க இறைவன். இறைவனால் படைக்கப்பட்டவைகளும் மனிதனால் உருவாக்கப்பட்டவைகளும் வணங்குதற்குரியன அல்ல. அவற்றையெல்லாம் படைத்த மூல முதலாகிய இறைவன் மட்டுமே வணங்குதற்குரியவன்’ எனப் பிரச்சாரம் செய்ததற்காக