பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

தாங்கள் புதுப்பித்துக் கட்டிய உலகின் முதல் வணக்கத் தலமான கஃபாவை நோக்கி இறையடியார்கள் ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். அவ்வழைப்புக்கிணங்க ஐயாயிரம் ஆண்டுகளாக இறையடியார்கள் மக்காவிலுள்ள கஃபா இறையில்லத்தை நோக்கி ‘ஹஜ்’ என்ற அரபுச் சொல்லுக்குச் ‘சந்திக்க நாடுவது’ என்பது பொருளாகும். உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கஃபா இறையில்லத்தை சந்திக்கச் செல்வதால் இப்பெயர் பெற்றுள்ளது.

ஹஜ் செல்லுபவர் இறையுணர்வு ஒன்றை மட்டும் நெஞ்சத்தில் தேக்கியவராக சொத்து, சுகம், சொந்தம், பந்தம் அனைத்தையும் விட்டு நீங்கிச் செல்கிறார். தான் வாழ்ந்த சுக வாழ்வை விட்டுக் கடினமான வாழ்வுக்குத் தன்னை மாற்றிக் கொள்கிறார். தியாக உணர்வின் எல்லைவரை செல்பவராகிறார்.

எளிமையே உருவாகும் ஹாஜி

கஃபா இறையில்லம் நோக்கிச் செல்லும் ஹாஜி ஒரு குறிப்பிட்ட எல்லைப் பகுதியில் தன் ஆடம்பர ஆடை அணிகளையெல்லாம் களைந்து விடுகிறார். தன் வெற்றுடம்பை தைக்கப்படாத சாதாரண இரு துண்டுத் துணிகளைக் கொண்டு போர்த்திக் கொள்கிறார். இது ‘இஹ்ராம்’ உடை என அழைக்கப்படுகிறது. இதே வகை உடைதான் இறந்த (மையத்) சடலத்தின் மீதும் போர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஹாஜியும் இறை நாட்டத்தோடு, அனைத்தையும் தியாகம் செய்தவராக மரணக் கோலத்தை மேற்கொள்கிறார்.

கஃபாவில் ஹஜ்ஜின்போது குழுமம் 25 இலட்சம் ஹாஜிகளும் ஒரே விதமான இஹ்ராம் உடையில் காட்சி தருகின்றனர். அரசனும் ஆண்டியும், வெள்ளையனும் கறுப்பனும் ஒரே வித உடை, நாடு, மொழி, இனம், நிறம்