பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*}{} பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

சாம்பின்-கழிகளைத் தலையிலே உடைய, ஆட்டுக்குட்டி களை மூட உதவும் கூண்டினையும்; அதளோன் துஞ்சும் காப்பின்-தோல் பாப் உடையோன் இருந்து காக்கும் காவலையும்; உதள நெடுந்தாம்பு-ஆட்டுக் கிடாய் களின் நீண்டதாம்பு தொடுத்த குறுந்தறி-சுட்டப் பட்ட- சிறிய கட்டுத்தறிகளையும் உடைய முன்றில்மனைமுற்றத்தில்: கொடுமுகத் துருவையொடுவளைந்த முகத்தையுடைய செம்மறி ஆடுகளோடு வெள்ளை சேக்கும்-வெள்ளாடுகள் அடைபட்டுக் கிடக்கும். இடுமுள்வேலி-வெட்டிக்கொணர்ந்து தட்டுக் கட்டிய முள்வேலியையுடைய எருப்படு வரைப்பின்எருக்குவியல் மிக்க ஆயர்பாடியில், நள்இருள் விடியல்செறிந்த இருள்சுழியும் விடியற்காலத்தில்; புள்ளழப் போகி-பற்வைகள் குர்ல் எழுப்பி எழுப்ப எழுந்து சென்று புலிக்குரல் மத்தம்-புலி முழக்கம் போலும் ஒலி எழக்கடையும் மத்து ஒலிப்ப வாங்கிஆரவாரிக்குமாறு கயிறுகொண்டு வலித்து, ஆம்பிவான் முகை அன்ன-குடைக்கள்ளானுடைய வெண்ணிற முகைகளையொத்த கூம்பு முகை-கூம்பி எழும் முகை களையுடைய, உற்ை அமை தீந்தயிர் கலக்கி-உறைந்து இறுகிய இனிய தயிரைக் கடைந்து; துரை தெரிந்துநுரைவடிவில் வெளிப்படும் வெண்ணெயை வேறுபிரித்து எடுத்து; புகர் வாய்க் குழிசி-மோர்ப் புள்ளிகள் மிகுந்த வாயையுடைய மோர்ப்பானையை, பூஞ்சுமட்டு இரிஇ-மெத்தென்ற சுமட்டின் மீது வைத்துச்சென்று: நாள்மோர் மாறும்-நாட்சாலையில் மோர் விற்கும் நவ் மா மேனி-நல்ல அழகு வாய்ந்த கறுநிற மேனியையும்; சிறுகுழைதுயல் வரும் காதின்-தாஞ்ருவி என அழைக்கப்படும் சிறிய அணி கிடந்து அசையும் காதினையும்; பணைத்தோள்-மூங்கில் போலும் தோளி னையும்; குறுநெறிக்கொண்ட கூந்தல்-சிறுசிறு

அறல்கள் நிறைந்தாற்போல் வாரி முடித்த கூந்தலையும்