பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார். 91

உடைய ஆய்மகள்-ஆயர்குடியில் வந்தவள் அளை விலை உணவின்-மோருக்கு விலையாகப் பெற்ற உணவுப் பொருள்களால் கிளையுடன் அருத்தி-சுற்ற தார். அனைவரையும் உண்ணப்பண்ணி, நெய்விலைநெய்க்கு விலையாக, கட்டிப் பசும்பொன் கொள்ளாள் -பசும்டொன் கட்டிகளைக் கொள்ளாமல்; எருமை, நல் ஆன் கருநாகு-கன்றின்ற நல்ல எரும்ையையும், நல்ல பசுவையும் வாங்கிவரும்; மடிவாய்க் கோவலர்சீழ்க்கை அடிக்க மடித்த வாயையுடைய கோவலர்க்கு உரிய குடிவயின் சேப்பின்-மனைகளில் சென்று தங்குவி ராயின்; இருங்கிளை ஞெண்டின்-பெரிய சுற்றங்களை யுடைய நண்டின்; சிறுவார்ப்பு அன்ன-சிறிய குஞ்சுகள் போலும் வடிவுடைய பசுந்தினை முரல்-பசிய தினை அரிசியால் ஆன. சோற்றை பாலொடும் பெறுகுவிர்

பாலோடு பெறுவீர்கள்.

7-1 ஆனிரை மேய்க்கும் ஆயர்

மலைநாட்டை அடுத்து வாழ்வதால், ஆனிரை ஓம்பி அவைதரும் பால் பயன் அல்லது வேறு வருவாய் காணா ஆயர் இயல்பை இனிது எடுத்துக் கூறியதை அடுத்து, வயல் வளம் மிகுந்த மருத நிலத்தை அடுத்து வாழ்வதால் உழவாலும் வளம் பெருக்கும் ஆயர் இயல்பை எடுத்துரைக்க முனைந்தவ்ர், செல்லும் வழியில் ஆனிரையோடு, மேய்புலத்தில் உறையும் ஆயர் இயல்பை உரைப்பாராயினர்

பரல்கற்களும் முள்ளும் நிறைந்த காட்டுப் பகுதியிலேயே வாழவேண்டியிருப்பதால், ஆயர்கள் எப்போதும் தோலால் ஆன செருப்பு அணிந்திருப்பர்; செருப்புக்காலோடு ஆனிரையின் பின் அலைவதால், அவர் கால்கள் செருப் புத் தழும்பேறியிருக்கும். ஆணின்ரகளை அடித்துத் துர்த்துல் கோலும், காட்டை அழித்து விளைநிலம் காண, மரம் செங்